திருமலை: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச முதல்வராகவும், ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராகவும் உள்ளார். இந்த நிலையில், மாநிலத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிங்கப்பூர் செல்கிறார்.
இது தொடர்பாக, 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவருடன் அமைச்சர்கள் நாரா லோகேஷ், நாராயணா மற்றும் டி.ஜி. பரத் ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், முதல்வர் வெளிநாடு செல்வதால், நிர்வாகப் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, பவன் கல்யாண் 4 நாட்களுக்கு தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பவன் கல்யாண் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்ற செய்தி ஜன சேனா கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.