புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பிப்ரவரி 25-ம் தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதால், 3-வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார்.
இந்நிலையில் மோடியின் 111-வது மன்கிபாத் வானொலி உரை 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஒலிபரப்பப்பட்டது. பிரதமர் மோடி இன்று தனது உரையில், ‘உலக யோகா தினத்தன்று ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன்.
காஷ்மீரின் இளைஞர்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குவைத் அரசு தனது தேசிய வானொலியில் இந்திய கலாச்சாரம் குறித்த பல்வேறு தகவல்களை ஒளிபரப்புகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது வீரர்களின் ஆட்டம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றுள்ளது. கேரள கலாச்சாரத்தில் குடைகளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஏழை, பணக்காரர், உழைக்கும் பெண்கள் என அனைவரும் தங்கள் தாய்மார்களுக்கு மரக்கன்றுகளை நட வேண்டும். இந்திய தயாரிப்புகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
உலகப் புகழ்பெற்ற 24 கவிஞர்களின் சிலைகளை துர்க்மெனிஸ்தான் அதிபர் திறந்து வைத்தார். இந்த சிலைகளில் நமது ரவீந்திரநாத் தாகூர் சிலையும் அடங்கும்.
லோக்சபா தேர்தல் இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்துள்ளது,” என்றார்.