வருடாந்திர பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் பதவியேற்பு மற்றும் கலந்துரையாடலுக்காக நாடாளுமன்றம் கூடியபோது, பல எதிர்க்கட்சிகள் நீட் எதிர்ப்பு, மணிப்பூரில் வன்முறை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.
இந்நிலையில், நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், சிலர் ஏமாற்றத்தால் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து வருகின்றனர்.நாடாளுமன்றத்தில் அரசியல் பேச வேண்டாம்.தேர்தல் சமயத்தில் வைத்துக்கொள்ளலாம்.
அரசின் குரலை நசுக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது. தோல்வியின் வெறுப்பால் சிலர் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள். விரக்தியுடன் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.