உலகில் எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் துலேயில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், “காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிரவாதத்தை ஆதரிக்க பாகிஸ்தான் மொழியை பேசுகின்றன. அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் மட்டுமே காஷ்மீரில் செல்லுபடியாகும்” என்றார்.
மேலும், “தற்போது, பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடையேயான ஒற்றுமையை அழிக்க காங்கிரஸ் முனைகிறது. இதற்குக் காரணம், மகாராஷ்டிராவுக்கு வந்துள்ள அன்னிய முதலீட்டில் பெரும் பகுதியை எங்கள் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளதுதான்’’ என்று விளக்கமளித்தார்.