புதுடெல்லி: போதைப்பொருளின் பிடியில் தங்கள் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்ளக் கூடுமோ என்ற கவலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு மையத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒலிம்பிக்கில் நமது தேசியக் கொடியை உலகுக்கு எடுத்துச் செல்லவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வாய்ப்பு நமது விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்துள்ளது. நீங்கள் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சில நாட்களுக்கு முன்பு, 100 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி 5வது இடத்தைப் பிடித்தது.
அஸ்ஸாமின் மொய்டாம்கள் உலக பாரம்பரிய தளமாக சேர்க்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து யுனெஸ்கோ பட்டியலிட்ட முதல் தளம் இதுவாகும். நீங்கள் இந்த இடத்தைப் பார்க்க வேண்டும்
தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.இன்று கைத்தறி பொருட்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றியை காட்டுகிறது. முதல் முறையாக காதி பொருட்களின் விற்பனை ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது
போதைப்பொருள் கடத்தலின் சவால்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தங்கள் குழந்தையும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள். இப்போது அவர்களுக்கு உதவும் வகையில் “மனஸ்” என்ற சிறப்பு மையத்தை அரசு திறந்துள்ளது. இலவச தொலைபேசி எண் 1933 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெறலாம்.
நாளை புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. புலிகள் நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். நம் நாட்டில் புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் இல்லாத கிராமங்கள் ஏராளம். உலகில் உள்ள 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. கடந்த ஆண்டைப் போலவே ஆகஸ்ட் 15ஆம் தேதியும் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களிலும், ஹர்ஹர் திரங்கா ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.