“மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மிகவும் விவாதத்திற்குரிய விஷயம் என்று கூறினார். அதேபோல், இந்தியா விண்வெளித் துறையில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த மாதம், இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டை ஏவியது, இது மிகவும் பாராட்டத்தக்கது.
இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் குழுவில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. 400க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. விண்வெளித் துறையில் இந்தியா புதிய உயரங்களை எட்டுகிறது என்பதை இது காட்டுகிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்களித்து வருகின்றனர். இது இந்திய இளைஞர்களின் ஆர்வத்தை, குறிப்பாக விண்வெளித் துறையில் மேலும் ஊக்குவிக்கிறது.
மேலும், “சர்வதேச மகளிர் தினம்” மார்ச் 8 அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நாள் பெண்களின் சக்தி மற்றும் பங்களிப்பைப் பாராட்ட ஒரு சிறந்த வாய்ப்பாகும். அன்று, எனது சமூக ஊடகக் கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அன்று அவர்கள் தங்கள் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
விண்வெளி மற்றும் அறிவியல் துறைகளில் இந்தியா A.I. தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இவை அனைத்தும் நமது நாட்டின் வளர்ச்சியின் அடையாளங்கள்.
இளைஞர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வரும் கவலையாக உள்ளது. அறிவியல் தொடர்பான மையங்களுக்கு அடிக்கடி சென்று, இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை மேம்படுத்த அறிவியல் பாதையில் பயணிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.