அக்டோபர் மாதம், பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்ய உள்ளார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு அமைச்சர் வி.எஸ். வாசவன், அக்டோபர் 21-ம் தேதி பூஜைகள் நிறைவடையும் நாளில் அவர் வருவார் என தெரிவித்தார். இதற்கான பயணத்திட்டம் முன்பே இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்ற காரணமாக ரத்து செய்யப்பட்டது.

சபரிமலையில் அக்டோபர் 16-ம் தேதி “மலையாள துலாம்” மற்றும் “ஐப்பசி” மாதப்பிறப்புகளின் பூஜைக்காக நடை திறக்கப்படும். இதன் நிறைவு நாளில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தரிசனம் செய்வார். ஆகோள ஐயப்ப சங்கமம் மாநாடு இதனை முன்னிட்டு பம்பை நதிக்கரையில் நடைபெற்றது. உலகளாவிய ஐயப்ப பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
குடியரசு தலைவரின் வருகை முன்னிட்டு தேவசம் போர்டும், மாநில போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். சில பக்தர்களின் அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும், மெய்நிகர் முன்பதிவு முறையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருகை, இந்திய ஜனாதிபதி ஒருவர் சபரிமலைக்கு வருவது முதல் முறை என்பதால், கோவிலில் பாதுகாப்பு, சீரமைப்பு பணிகள் மற்றும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் வலுவாக முன்னெடுக்கப்படுகின்றன.