குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றினார். அதன் பின், எம்.ஐ.,17 மற்றும் 1வி ஹெலிகாப்டர்களின் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. 300 கலைஞர்களின் அணிவகுப்பு, இசைக்கருவிகளின் முழங்கலில் மரியாதை செலுத்தப்பட்டது.
பிரதமர் மோடி, டிஜிட்டல் பார்வையாளர் புத்தகத்தில் குறிப்புகளை பதிவு செய்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இதில், இந்தோனேசியாவை சேர்ந்த 382 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். இந்திய ராணுவத்தின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் அதி நவீன ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களும் ஊர்வலத்தில் பங்கேற்றன.
பிரதமர் மோடி இந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியன்டோவை வரவேற்றார். பின்னர், பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பிரளய் ஏவுகணை, பினாகா ராக்கெட், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை, சஞ்சய் போர்க்கள கண்காணிப்பு அமைப்பு, டி90 பீஷ்மா டாங்குகள், நாக் ஏவுகணைகள் மற்றும் பல அதி நவீன ஆயுதங்கள் முதல் முறையாக ஊர்வலத்தில் பங்கேற்றன.
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளை பகிர்ந்து, நமது அரசியலமைப்பின் சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.