புதுடெல்லி: இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பிரதமர் மோடியும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 2024 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2025 ஆம் ஆண்டின் பிறப்பை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு சமூக வலைதளங்களில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும். உலகிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றாக பயணிப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, “இனிய 2025! இந்த ஆண்டு அனைவருக்கும் வெற்றிக்கான புதிய வாய்ப்புகளை வழங்கட்டும். இந்த புத்தாண்டு அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கட்டும். அனைவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியமும் வளமும் காணப்படட்டும். என்று பதிவிட்டுள்ளார்.