ஆந்திராவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு விழாவில், பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து வாகன பேரணியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் நின்றிருந்த தன்னார்வலர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் முக்கியமான திட்டங்கள் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.