உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று (பிப்., 05) திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி பிப்., 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உள்நாட்டும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஹா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பிரயாக்ராஜில் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். முன்னதாக, மோட்டார் படகில் கும்பமேளா நடக்கும் இடத்தை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் பார்வையிட்டார். அதன் பிறகு, அவர் பிரயாக்ராஜில் உள்ள கோவில்களை சென்று வழிபட்டார்.