2024 ஆகஸ்ட் 15 அன்று, 78வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்கிறனெனக் கூறினார். “ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு தேர்தல் நடத்தப்படுவது, தேசத்தின் முன்னேற்றத்தில் தடைகளை உருவாக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மோடி, “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்ற கனவை நனவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “தேசிய வளங்கள் சாமானியர்களுக்கு பயன்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என்றும் கூறினார்.
தேசத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய செங்கோட்டையிலிருந்தும், தேசிய மூவர்ணக் கொடியை சாட்சியாகக் கொண்டும்” அரசியல் கட்சிகளை பிரதமர் வலியுறுத்தினார். மேலும், “தேசிய வளங்கள் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கனவை நனவாக்க முன்வர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார். லோக்சபா தேர்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது, பா.ஜ.,வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.