புது டெல்லி: மகாராஷ்டிராவின் நவி மும்பையில் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையம் 1,160 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. இது ஆண்டுக்கு 2 கோடி பயணிகளைக் கையாள உதவும்.
திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவில் நிறைவடையும். இவை நிறைவடைந்தவுடன், ஆண்டுக்கு 9 கோடி பயணிகளைக் கையாள முடியும். நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 2030-ம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டம் ரூ.12,200 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆச்சார்யா அத்ரே சௌக் முதல் கஃபே பரேட் வரை புதிய மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் மும்பைக்கு வருகை தருவார். அப்போது, அவர் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தையும், மும்பை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தையும் திறந்து வைப்பார்.
இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வருகிறார். அவர் மும்பையில் முகாமிட்டு நாளை காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார். அன்று காலை, பிரதமர் மோடி பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மருக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கிறார். மதியம், இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய உரைகளை நிகழ்த்துவார்கள். பின்னர், மும்பையில் நடைபெறும் ஃபின்டெக் விழாவில் இருவரும் பங்கேற்பார்கள்.