முக்வா: உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காகவும், இந்த ஆண்டு உத்தரகாண்டில் குளிர்கால சுற்றுலா திட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நேற்று உத்தரகாண்ட் மாநிலம் சென்றார். அங்கு உத்தரகாசியில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்குச் சென்ற மோடி, கங்கைக்கு ஆரத்தி செய்தார்.

ஹாசிலில் நடைபெற்ற குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மலையேற்றம் மற்றும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உத்தரகாண்ட் திவ்ய தேசத்திற்கு திரும்புவதை பாக்கியமாக கருதுகிறேன். இந்த பத்தாண்டு உத்தரகாண்டின் தசாப்தமாக மாறி வருகிறது. இந்திய சுற்றுலாத் துறையை பல்வகைப்படுத்துவதும், துடிப்பானதாக மாற்றுவதும் உத்தரகாண்டிற்கு மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு சீசனும் உத்தரகாண்டில் சுற்றுலாப் பருவமாக மாற வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்தை வளர்ந்த மாநிலமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது உத்தரகாண்ட் வளர்ச்சிக்கு உதவும்” என்றார்.