ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. இதில் இருவர் வெளிநாட்டினர் என சந்தேகம் எழுந்துள்ளது.

நேற்று பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு பெறும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பு ஒன்று பொறுப்பேற்றதாக அறிவித்துள்ளது. அதன் பிறகு, சம்பவ இடம் முழுமையாக ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ஆசிப் பவுஜி, சுலைமான் ஷா, அபு தல்ஹா ஆகியோரைத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களாக சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த புகைப்படங்கள் தற்போது பாதுகாப்பு அமைப்புகளால் பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் தகவல் திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில் இருவர் வெளிநாட்டு பின்புலம் கொண்டவர்களாக இருக்கலாம் என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.