புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளிக்கு முன் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவில் பங்கேற்று முதல்வர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
ரேஷன் கடைகளை திறந்து விரைவில் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்படும்.
தீபாவளிக்கு முன் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி வழங்கப்படும். மத்தியில் எங்கள் தேஜா கூட்டணி அரசு உள்ளது. மத்திய அரசு எங்களுக்கு தேவையான உதவிகளை எப்போதும் செய்து வருகிறது.
பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.