சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி மற்ற மாநிலங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:-

இந்தியா முழுவதும் 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 106 விற்பனை நிலையங்களும், பிற மாநிலங்களில் 44 விற்பனை நிலையங்களும் இயங்கி வருகின்றன. ஆந்திராவில் 8 விற்பனை நிலையங்களும், தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 3 விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் விற்பனை நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் நடைபெற்ற தொடக்க விழாவில் பாஜக அமைச்சர் பங்கேற்று கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகளின் தரத்தைப் பாராட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிய விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது. இதற்காக 44 லட்சம் 900 சதுர அடியில் பரப்பளவில் விற்பனை நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.