வாஷிங்டன்: ராகுல் காந்தியுடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போனில் பேசவில்லை என அமெரிக்க துணை அதிபர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் எதிர்க்கட்சித் தலைவரானார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிட ஆதரவு திரட்டி வருகின்றனர். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தொலைபேசியில் பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. எனினும், இரு தரப்பு பேச்சுவார்த்தை விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும், அமெரிக்க துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுடன், துணைத் தலைவர் கமலா எந்த தொலைபேசி உரையாடலையும் நடத்தவில்லை.