பாஜக ஆட்சியில் ஒருவர் மட்டுமே பிரதமராக முடியும் என்றும் மற்றவர்களுக்கு உரிமை இல்லையா என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் பயப்படுகிறார்கள். மகாபாரதத்தில் அபிமன்யுவைப் போல இந்திய மக்களின் நிலை சக்கர வியூகம் போல் உள்ளது என்றும், பாஜகவின் சக்கர வியூகம் நாட்டு மக்களுக்கு உதவவில்லை என்றும் அவர் கூறினார்.
துரோணரும், கர்ணனும், அஸ்வத்தாமாவும் சக்ர வியூகத்தில் இருந்தது போல மோடியும், அமித்ஷாவும் இங்கே இருப்பதாக ராகுல் காந்தி கடுமையாக பேசினார். மேலும் பாஜக ஆட்சியில் ஒருவர் மட்டுமே பிரதமராக முடியும் என்றும் மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்றும் அவர் கூறினார். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்