வயநாடு: மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா இன்று (ஆகஸ்ட் 1) வந்தனர். காலை 9:30 மணிக்கு கண்ணூர் வந்து சாலை வழியாக வயநாடு சென்றனர். மேப்பாடி, முண்டகை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் 290க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
சூரமலையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அழைத்துச் சென்றார். இருவரும் ரெயின்கோட் அணிந்திருந்தனர். அதிகாரிகள் ராகுலையும் பிரியங்காவையும் பாதுகாப்பாக தற்காலிக பாலங்கள் மற்றும் மண் சரிவுகள் வழியாக அழைத்துச் சென்றனர்.