புதுடெல்லி: திறமையற்ற அரசின் தவறான கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் என காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். ஒரு சமூக ஊடகப் பதிவில், “பணமதிப்பு நீக்கம் சிறு தொழில்கள் மற்றும் முறைசாரா துறைகளை அழித்து ஏகபோகங்களுக்கான வழிகளை உருவாக்கியுள்ளது” என்று கூறினார்.
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தைத் தடுக்க, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், பணப் பரிவர்த்தனைகளைக் குறைப்பதும் முக்கிய நோக்கங்கள் என்று அரசு அப்போது தெரிவித்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பை விட இன்று இந்தியாவில் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
திறமையற்ற மற்றும் தவறான எண்ணம் கொண்ட கொள்கைகள் நீடித்தால், நாட்டின் பொருளாதாரம் பேரழிவை நோக்கி செல்லும் என்றும் ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.