லக்னோ: அவதூறு வழக்கில் ஆஜராக உத்தரபிரதேசம் வந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, செருப்பு கடைக்கு சென்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாகப் பேசியதாக ராகுல் மீது சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (26.07.2024) ஆஜரானார். விசாரணை, 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, சுல்தான்பூர் செல்லும் வழியில், ஒரு செருப்புக் கடைக்கு திடீரெனச் சென்று, கடை வைத்திருக்கும் முதியவரிடம் நலம் விசாரித்தார். சுமார் 30 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது.