புதுடெல்லி: தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் தனது வயநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கேரள மாநிலம் முண்டக்கை, சூரல்மலை, வயநாடு ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இரண்டு சம்பவங்களில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மண்ணில் புதைந்தனர்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங். எம்.பி., ராகுல் இன்று (ஜூலை 31) வயநாடு செல்கிறார். மேலும், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் தனது வயநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார். இடைவிடாத மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், பயணம் ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறினார். நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விரைவில் வயநாடு செல்வதாகவும் ராகுல் உறுதியளித்துள்ளார்.