போபால்: போபாலில் கட்டப்பட்டுள்ள 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் இணையத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.
மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.