புதுடெல்லி: வரும் 2025ம் ஆண்டு சீர்திருத்த ஆண்டாக இருக்கும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறையில் இந்த ஆண்டு பல முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்யவும் பாதுகாப்பு துறை தயாராக உள்ளது. இதன் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதிர்கால போர்களில் வெற்றி பெற தேவையான அனைத்து பணிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.
இதன்மூலம், பாதுகாப்புப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னேற்றம் அடையும் என்றும், ராணுவ வீரர்களின் நலனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.