சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, புதுச்சேரியில் 21 முதல் 55 வயதுக்குட்பட்ட வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

சிகிச்சைக்கான பயணச் செலவு ரூ.400-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படும்.
எய்ட்ஸ் பாதித்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.