திருவனந்தபுரத்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில், டியூஷன் ஆசிரியர் மனோஜ் மீதான தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 2, 2019 அன்று, சிறப்பு வகுப்புக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, டியூஷன் சென்டரில் மாணவியை மனோஜ் பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சம்பவத்தை வீடியோ எடுத்தார்.
இதனால் பயந்துபோன மாணவி, டியூஷன் செல்வதை நிறுத்தினார். பின்னர் அந்த மாணவியின் வீடியோ மற்றும் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் மனோஜை கைது செய்தனர். முதலில், குற்றத்தை மறுத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மனோஜின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று, குற்றத்திற்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஆர்.ரேகா, மனோஜுக்கு 111 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.