புதுடில்லி: செல்லப்பிராணிகளுக்காக ரூ.165 கோடி மதிப்பில் மருத்துவமனை திறந்தவர் ரத்தன் டாடா என்பது தெரியுங்களா?
நாட்டிலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சையுடன் கூடிய அதிநவீன செல்லப்பிராணி மருத்துவமனையை திறந்தவர் தொழிலதிபர் ரத்தன் டாடா.
சிறு வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் மீது குறிப்பாக நாய்கள் மீது அதிக விருப்பம் கொண்டவரான ரத்தன் டாடா, அவற்றின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
எத்தனையோ நிறுவனங்கள், அறக்கட்டளைகள் துவக்கி நடத்தினாலும், தன் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது டாடா டிரஸ்ட் சார்பில் 165 கோடி ரூபாய் செலவில் செல்லப் பிராணிகளுக்காக தான் தொடங்கிய சிறப்பு மருத்துவமனை தான்என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தனது செல்லப்பிராணி நோய்வாய்பட்டதால், இங்கிலாந்து இளவரசர் கையால் பெற இருந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வை ரத்தன் டாடா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.