மும்பை: மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளராக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி பிரபல தொழிலதிபர் மற்றும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, 86 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். சாந்தனு நாயுடு, ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பராக விளங்கினார், மேலும் அவரது வித்தியாசமான அணுகுமுறையால் டாடாவால் ஈர்க்கப்பட்டார்.
இன்ஜினியரிங் படித்த பின்னர், சாந்தனு நாயுடு, இன்டர்னாக டாடா குழுமத்தில் சேர்ந்தார். தற்போது, அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார். சாந்தனு நாயுடு, இந்தத் தேர்வை பற்றி மகிழ்ச்சியுடன் கூறியதாவது: “நான் என் அப்பாவுடன் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் இருந்து பணி முடித்துப் புறப்பட்ட நினைவுகளை பகிர்ந்தேன். நான் அவருக்காக ஜன்னலில் காத்திருப்பேன்,” என்றார்.
2018-ம் ஆண்டு சாந்தனு நாயுடு, ரத்தன் டாடாவின் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அதற்கு முன், அவர் டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். 2014-ம் ஆண்டு, அவர் முதன்முதலில் ரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்த்தார்.