புதுடெல்லி: விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு இலவச மின்சாரம், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச போக்குவரத்து அறிவிப்புகள் என பல மாநிலங்கள் வழங்கும் இலவச திட்டங்களால் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
இதனால் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடும் வெகுவாக குறைந்துள்ளது. 2018-19 முதல், மாநிலங்கள் வழங்கும் மானியங்கள் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தொகையை விட 2.5 மடங்கு அதிகரித்து ரூ.4.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.