நிதித் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் பாதிப்பு மற்றும் நெறிமுறைகளை வகுக்க 8 பேர் கொண்ட குழுவை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அமைத்துள்ளது.
இந்த குழுவின் தலைமையை ஐஐடி பாம்பே-யின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் புஷ்பக் பட்டாச்சார்யா மேற்கொள்கிறார். குழுவில் பல முக்கிய நிபுணர்கள் தேப்ஜானி கோஷ் (ரிசர்வ் வங்கி இன்னோவேஷன் ஹப்),பலராமன் ரவீந்திரன் (வத்வானி ஸ்கூல் ஆப் டேட்டா சயின்ஸ்), அபிஷேக் சிங் (எம்இஐடி),ராகுல் மத்தகன், அஞ்சனி ரத்தோர் (எச்டிஎப்சி வங்கி), ஸ்ரீஹரி நகரலு (மைக்ரோசாப்ட்), சுவேந்து பட்டி (ஆர்பிஐ, பின்டெக்) இடம் பெற்றுள்ளனர்.
நிதித்துறையில் ஏஐ பயன்பாட்டின் வளர்ச்சி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்கவும் உதவுகிறது. ஆனால் இதன் பாதிப்பு மற்றும் சிக்கல்களை கண்காணிப்பது அவசியமாகிறது.
இந்த புதிய குழுவின் முடிவுகள் இந்தியாவின் நிதி நிர்வாகத்தில் ஏஐ உபயோகத்தை ஆளுமைக்கும் பங்களிக்க வாய்ப்புள்ளது.