பெங்களூருவில் ஒரு பரபரப்பான சாலையில், ஒரு வாலிபர் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து டீ குடிக்கும் போல் செயற்கையாக நடித்துக்கொண்டு, அதைப் படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாகனங்கள் சுற்றி செல்லும் போது, தனது தோழர்களுடன் வீடியோ எடுத்த அந்த வாலிபர், சமூக வலைதளங்களில் அதை பதிவேற்றினார்.
இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வைரலானதும், போலீசார் விசாரணையில் இறங்கி அந்த நபரை கண்டுபிடித்தனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியதற்காக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து பெங்களூரு போலீசார் சமூக வலைதளத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து, ”சாலையில் ஸ்டண்ட் செய்வது பெரிய அபராதத்திற்கும், கைது செய்யப்படுவதற்கும் வழிவகுக்கும்” என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.