புது டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தீவிரமாக விசாரித்து வருகிறது.
மும்பை தாக்குதலைப் போலவே (26/11), பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பின் (ISI) உத்தரவின் பேரில், பஹல்காம் தாக்குதலுக்கு நாட்டின் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா சதித்திட்டம் தீட்டியுள்ளது. லஷ்கர் கமாண்டர் சஜித் ஜூத் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உதவியுடன் இந்தத் தாக்குதலை நடத்தினார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் தளபதி சுலைமான் தலைமை தாங்கினார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர் மையத்தில் பயிற்சி பெற்ற சுலைமான், 2022-ல் எல்லையைத் தாண்டி ஜம்மு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.
அவருடன் இரண்டு பாகிஸ்தானியர்களும் தாக்குதலில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.