புது டெல்லி: அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடுவதற்கான அத்தியாவசிய நிபந்தனையை கூட பூர்த்தி செய்யாத 334 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இந்த அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் எங்கும் கூட இல்லை என்று கூறி, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854 ஆக இருந்த நிலையில், இப்போது 334 அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன, இந்த எண்ணிக்கை 2,520 ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் தற்போது 6 பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளும் 67 மாநிலக் கட்சிகளும் உள்ளன.