திருமலை: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ‘X’ பக்கத்தில் இவ்வாறு கூறியதாவது:-
முதலில், ஒரு இந்தியராக, பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஆயுதப்படைகளின் முயற்சிகளுக்காக ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

எனது அனைத்து சகாக்கள் மற்றும் கட்சி சகாக்கள், அதே போல் நல்ல குடிமக்களும் இந்த முயற்சியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது வெற்றியின் மிக தீர்க்கமான தருணம் வரை நாம் அனைவரும் நம் படைகளுடன் ஒன்றாக நிற்போம். ஜெய் ஹிந்த்! ஆபரேஷன் சிந்தூர். இதை அவர் பதிவிட்டுள்ளார்.