பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து போலீசார் சாலைகளில் இருந்து அபராதம் வசூலிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12 வரை அபராதம் செலுத்தினால், 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் முன்வந்து ஆன்லைனில் அபராதம் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, செப்டம்பர் 12 வரை, 37 லட்சத்து 86 ஆயிரத்து 173 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு ரூ.106 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
கடைசி நாளான செப்டம்பர் 12 அன்று, ரூ.25 கோடி மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.