புதடில்லி: டெல்லி தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் சோதனையில் ரூ.194 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. முன்னதாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், டெல்லியில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.194 கோடி ரொக்கப் பணம், மது பாட்டில்கள், இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்துள்ளார்.