புது டெல்லி: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களின் கட்டமைப்பையும் ஆய்வு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு குறியீட்டின்படி, பள்ளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அவசரகால தயார்நிலை பயிற்சி போன்றவை தணிக்கை செய்யப்பட வேண்டும்.

பள்ளி கட்டிடங்களின் கட்டமைப்பு தீ பாதுகாப்பு, அவசரகால வெளியேற்றங்கள் மற்றும் மின் வயரிங் ஆகியவற்றுடன் முழுமையாக மதிப்பிடப்பட வேண்டும். ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் முதலுதவி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உட்பட அவசரகால தயார்நிலையில் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.”