மும்பை: மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் என்ன விவாதம் நடந்தாலும் அது மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும். இப்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன. பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றார்.
எனக்குத் தெரிந்து 10-11 வருடங்களில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு அவர் சென்றதில்லை. ஆர்எஸ்எஸ் தலைமை மாற்றத்தை விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்கிறார். சஞ்சய் ராவுத்தின் கருத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். 2029-ல் (அடுத்த லோக்சபா தேர்தல் நடக்கும் ஆண்டு) நரேந்திர மோடியை பிரதமராக நாடு பார்க்கிறது. அதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். நேற்று நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைமையகத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவர் மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டாவது சர்சங்கசாலக் மாதவ் சதாசிவ் கோல்வால்கர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, “100 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட சித்தாந்தத்தின் விதை இன்று பெரிய மரமாக வளர்ந்துள்ளது. கோட்பாடுகளும், விழுமியங்களும் இந்த மரத்திற்கு பெரும் உயரத்தை அளித்துள்ளன. லட்சக்கணக்கான கரசேவகர்கள் இந்த மரத்தின் கிளைகள். ஆர்.எஸ்.எஸ்.. இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்று நரேந்திர மோடி பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயதாகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள், இளைய தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்க வேண்டும் என்பது பாஜகவில் எழுதப்படாத விதி. சஞ்சய் ரவுத்தின் கருத்து இதை கடைபிடிப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் எடியூரப்பா போன்ற சிலர் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.