புதுடெல்லி: அடுத்த மாதம் ஓய்வு பெற்ற பிறகு இமயமலையில் பல மாதங்கள் தனிமையில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமார், இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வருகிறார். 2022ல் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.இவரது பதவிக்காலம் பிப்ரவரி 18ம் தேதியுடன் முடிவடைகிறது.நேற்று தனது கடைசி பணியில் டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
ஓய்வுக்கு பின் என்ன செய்வீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு, ராஜீவ் குமார் கூறியதாவது: அடுத்த மாதம் ஓய்வு பெற்ற பின், இமயமலையில் பல மாதங்கள் தனிமையில் இருப்பேன்.. அடுத்த 5 மாதங்கள் தனிமையில் இருப்பேன்.
தனிமையும் சுய படிப்பும் வேண்டும். அவர் தனது வாழ்க்கையில் குழந்தைகளுக்காக கற்றலின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்து, ஏ.பி.சி.டி. கற்றுக் கொண்டு மரத்தடியில் படித்த நாட்களை மறக்கவில்லை. அவர், அந்த இடத்திற்கு மீண்டும் சென்று, குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்புவதாக தெரிவித்தார்.