பிஜபூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில், இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் புதைத்த கண்ணிவெடியில் சிக்கி மாநில ரிசர்வ் படை வீரர் தினேஷ் நாக் உயிரிழந்தார். இதில் மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திராவதி தேசிய பூங்காவில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் கூட ஒரு பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார். இந்த தாக்குதல்கள் மாவோயிஸ்ட் பிரச்சினையின் ஆபத்துகளை மீண்டும் வெளிக்கொணர்ந்துள்ளது.