அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் வந்ததை அடுத்து ராமர் கோயில் அறக்கட்டளை விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்பியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பான விபரங்கள் எதனையும் போலீசார் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக ராமர் கோயில் அறக்கட்டளையோ அல்லது பாதுகாப்பு அமைப்புகளோ அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.