மும்பையில் நடைபெற்று வந்த ‘கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான் படுகாயம் அடைந்ததையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணித்துள்ளார். ‘பதான்’ மற்றும் ‘வார்’ திரைப்படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்று வருகின்றனர்.

படத்தின் சண்டைக் காட்சிகள் மும்பையின் ‘கோல்டன் டொபாக்கோ’ ஸ்டுடியோவில் தீவிரமாக நடைபெற்று வந்தபோது ஷாருக் கான் திடீரென காயம் அடைந்தார். ஆரம்ப சிகிச்சை மும்பையிலேயே அளிக்கப்பட்டபோதிலும், மேலதிக சிகிச்சைக்காக அவரை அமெரிக்காவிற்கு மாற்றியுள்ளனர். அவர் அடைந்த காயத்தின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், படப்பிடிப்பு குழுவினர் கூறியதாவது, “அவருக்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருமாதம் ஓய்வில் இருக்க மருத்தவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனை மற்றும் ஓய்வுக் காலத்தை கருத்தில் கொண்டு, ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இது சிறிய கவலையை ஏற்படுத்தினாலும், ஷாருக்கின் விரைவான நலமடைவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.