புனே: கடந்த ஆண்டு ஜூலை மாதம், லோக்சபா தேர்தலுக்கு முன், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. தனது ஆதரவாளர்களுடன் ஆளும் சிவசேனா – பாஜ கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
லோக்சபா தேர்தலின் போது கட்சி இரண்டாக பிளவுபட்ட நிலையில், தேசியவாத காங்கிரசின் கடிகார சின்னத்தை பெற, சரத்பவார் மற்றும் அஜித் பவார் அணியினர் தேர்தல் கமிஷனை அணுகினர்.
சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அஜித் பவார் அணிக்கு கடிகார சின்னம் ஒதுக்கப்பட்டது. மேலும், சரத் பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், கொம்பு ஊதும் மனிதன் சின்னத்தையும் ஒதுக்கியது.
மகாராஷ்டிர சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சின்னம் தொடர்பான பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது. அஜித் பவார் தலைமையிலான அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடிகாரச் சின்னத்தை முடக்கக் கோரி சரத் சந்திர பவாரின் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை (25-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது. சரத் பவார் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே கூறுகையில், “எங்கள் கட்சியின் நிறுவன உறுப்பினர் சரத் பவார் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்.
கடிகாரம் சின்னம் என்றால் இறுதி முடிவு வரை சின்னம் முடக்கப்படும். இரு கட்சிகளும் இருக்க வேண்டும். எங்கள் அணிக்கு (சரத் பவார்) இருப்பதைப் போல அஜித் பவார் அணிக்கும் சமமாக ஒரு சின்னம் ஒதுக்கப்பட வேண்டும்.
மேலும் கட்சி சின்னம் தொடர்பான விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்க வேண்டும்.