பெண் போலீஸ் அதிகாரிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்ளிட்ட சில வழக்குகளில் சிக்கிய சவுக்கு சங்கர், கடந்த சில மாதங்களாக சிறையில் உள்ளதால், உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவருக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் புழல் சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாகவும், அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தாலும் முறையான மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்றும் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
சவுக்கு சங்கர் தனக்கு சரியான உடை தரவில்லை, படிக்க புத்தகம் கொடுக்கவில்லை, தேவையான மருந்துகளை கொடுக்கவில்லை, தினமும் பொய் வழக்குகளை போட்டு கோர்ட்டுக்கு அலைய வைப்பதாகவும், வெளியில் யாருடனும் பேச விடாமல் செய்வதாகவும் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாலும், அவர் மிகவும் பலவீனமாகவும், மன அழுத்தத்துடனும் இருப்பதால் அவருக்கு எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் கூறினார். அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.