ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார். இதையடுத்து ஜனாதிபதி, பிரதமர் மோடி நேரில் சென்று அஞசலி செலுத்தினர்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் (81). இவர் கிட்னி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் ஜூன் 19ஆம் தேதி சேர்க்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஷிபு சோரன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பிரதமர் மோடியும் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் பிதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் “பழங்குடியினர், ஏழை மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஷிபு சோரன் ஆர்வதாக இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஷிபு சோரன் உடல் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.