பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் மோடி குஜராத்துக்கு ஆதரவாக செயல்படுவது தெளிவாக தெரிகிறது. முக்கியமான உற்பத்தி ஆலைகள் குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளன மற்றும் பெரும்பாலான முதலீடுகள் குஜராத்தில் செய்யப்படுகின்றன.
கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற வளமான மாநிலங்களைத் தவிர, அந்த முதலீடுகள் மற்றும் மானியங்கள் அனைத்தும் ஊக்கத்தொகையுடன் குஜராத்திற்கு வழங்கப்படுகின்றன. பா.ஜ., எம்.பி.,க்களின் மவுனம், மாநிலத்திற்கு செய்யும் துரோகம். அரசின் நலனுக்காக அவர்கள் மௌனம் கலைக்க வேண்டிய நேரம் இது. கர்நாடகா மற்றும் தென் மாநிலங்களின் நலனுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்றார்.