ஹைதராபாத் : ஹைதராபாத்தில் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மண்ணில் புதைந்து 3 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கட்டுமான பணி நடைபெறும் பகுதி தங்கி வேலை செய்து வந்துள்ளனர்
இன்று மண் அள்ளும் பணி நடைபெற்று வந்த நிலையில், மண் சரிவு ஏற்பட்டு மண்ணுக்கு அடியில் சிக்கினர். உடனடியாக மீட்புப்பணி நடைபெற்ற நிலையில், அவர்கள் மூவரும் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு இல்லாததால் தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கிக் கொண்டதாக சமூக அலுவலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.