அமராவதி: ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, கடப்பா மற்றும் சத்யசாய் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதேபோல், தெலுங்கானாவிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆந்திராவில் கடப்பா மற்றும் சத்யசாய் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. மேலும், திருப்பதி, நெல்லூர், பிரகாசம், கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் 3 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தெலுங்கானாவில் ஆதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை வரை மழை தொடரும் என்றும், தெலுங்கானா முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.