மகாராஷ்டிரா: அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில் உரையாட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மாநிலத்தில் அரசு அலுவலகங்களில், வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்கள் மற்றும் மராத்தி மொழி தெரியாதவர்களை தவிர மற்ற அனைவரும் மராத்தி மொழியில்தான் பேச வேண்டும்.
இந்த விதி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். அரசின் உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.